கழிவுநீர் செல்லும் குழாய் பெயர்ந்ததால் பாலத்தில் திடீர் பள்ளம்

தேன்கனிக்கோட்டை அருகே கழிவுநீர் செல்லும் குழாய் பெயர்ந்ததால் பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

Update: 2022-12-16 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இதன் அருகே உள்ள பாலத்தையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறிய பள்ளம் ஏற்பட்டது.

தற்போது கழிவுநீர் செல்லும் குழாய் பெயர்ந்து திடீரென பெரிய அளவிலான பள்ளமாக ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் இரவு நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் அருகில் மின் கம்பம் ஆபத்தான நிலையில் எப்போதும் விழும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உயிர் பலி ஏற்படும் முன்பு பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்