தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் 'திடீர்' ஆய்வு

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் ‘திடீர்’ ஆய்வு செய்தார்.;

Update:2022-11-13 00:15 IST

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் 'திடீர்' ஆய்வு செய்தார்.

கோட்ட மேலாளர் ஆய்வு

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை பணிகள் செய்ய வேண்டி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பாக பயணிகள் நலச்சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று தூத்துக்குடி ெரயில் நிலையத்தில் மதுரை ெரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். ெரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார். ெரயில் நிலைய பணியாளர்கள், ஊழியர்களிடம் ெரயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து இந்த ெரயில் நிலையத்தில் பயணிகளுக்காக செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் தூத்துக்குடி ெரயில் நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

கோரிக்கை மனு

முன்னதாக தூத்துக்குடி பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம், தூத்துக்குடி ெரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்காக புதிதாக சாலை ஒன்றை அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு குருவாயூர் இணைப்பு ரெயிலை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரை ெரயில்வே கோட்ட மேலாளரிடம் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மதுரை கோட்ட மூத்த பொறியாளர் பிரவீனா, தூத்துக்குடி ெரயில் நிலைய மேலாளர் செந்தில்குமார், ஸ்டேஷன் மாஸ்டர் மரிய ராஜேஷ், ரெயில்வே பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்