தனியார் பள்ளி பஸ்சில் திடீர் தீ
தனியார் பள்ளி பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
கரூர் அருகே உள்ள காந்திகிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகளை வழக்கம்போல் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டு அதன் டிரைவர் பஸ்சை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த பஸ்சின் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் பஸ்சில் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் என்ஜின் பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.