தென்னை நார் ஏற்றிய லாரியில் திடீர் தீ

தென்னை நார் ஏற்றிய லாரியில் மின்சார வயர் பட்டதால் தீப்பிடித்து எரிந்தது.;

Update:2022-10-18 21:58 IST

குடியாத்தத்தை அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து தென்னை நாரால் செய்யப்பட்ட கயிறுகள் மற்றும் தென்னை நார் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திராவுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அனுப்ப தென்னை நார் லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது தாழ்வாக செல்லும் மின்சார வயர்கள் தென்னை நாரில் பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான தென்னை நார் மற்றும் லாரியின் பாகங்கள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்