சேலம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் தீ

Update: 2023-06-02 20:25 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் மைசூர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நடைமேடையில் விரைவு பஸ் போக்குவரத்து கழக நேர காப்பாளர் அறை செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த அறையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேர காப்பாளர் அறையில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்