தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-13 19:06 GMT

கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு (வயது 60). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜ்கண்ணு சர்ச் கார்னர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து ராஜ்கண்ணு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராஜ்கண்ணு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தசம்பவம் குறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்