தையல் தொழிலாளி திடீர் சாவு
சிவகிரியில் தையல் தொழிலாளி திடீரென்று இறந்தார்.;
சிவகிரி:
தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் என்ற ரவி (வயது 60). இவர் தற்போது தென்காசி மாவட்டம் சிவகிரியில் கடை வைத்து தையல் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையின் முன்பாக நின்று கொண்டு இருந்தார். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.