ரேஷன் கடை ஊழியர் திடீர் சாவு

சங்கரன்கோவிலில் ரேஷன் கடை ஊழியர் திடீரென இறந்தார்.;

Update:2022-06-19 16:55 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காயிதே மில்லத் 1-ம் தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில் மகன் சுலைமான் (வயது 45). ரேஷன் கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் நேற்று காலை சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஊருணிக்கு அருகே இறந்த நிலையில் கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சுலைமான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். சுலைமான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சுலைமானுக்கு மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்