புழல் சிறை கைதி திடீர் உயிரிழப்பு... 4 நாட்களில் 2 பேர் மரணம்..!
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தார்.
சென்னை,
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் சென்னை நந்தனத்தை சேர்ந்த கணேசன் என்பவர், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் புழல் சிறையில் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கணேசனுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், அவரை சிறைக்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
புழல் சிறையில், கடந்த 4 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்தது, சக கைதிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.