தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு
நெல்லையில் தனியார் நிறுவன ஊழியர் திடீரென்று இறந்தார்.;
நெல்லை சி.என்.கிராமம் லட்சுமிபுரம் புதுமனை தெருவை சேர்ந்தவர் கேபிரியல் கனகராஜ் (வயது 48). இவர் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் மீண்டும் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கேபிரியல் கனகராஜூக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.