சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும் - தெற்கு ரயில்வே தகவல்

தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, சிக்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-29 17:37 GMT

கோப்புப்படம் 

சென்னை, 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் சென்னை ஆவடியில் மழைநீரில் தண்டவாளங்கள் மூழ்கியது. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, சிக்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் செல்லக்கூடிய மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் எந்தவித ரெயில்களும் ரத்து செய்யப்படவில்லை என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவித்துள்ளது. இதில் அம்பத்தூர் - ஆவடி இடையே மட்டும் தண்டவாளத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் கால தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்