போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றவர் கைது

தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-01 18:45 GMT

தூத்துக்குடி 3 செண்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்கரவர்த்தி (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு 3 செண்ட் பகுதியில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு ரோந்து வந்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தினாராம். இதில் ஆத்திரம் அடைந்த சக்கரவர்த்தி, முகிலரசனை தாக்க முயன்றாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்