ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

பனவடலிசத்திரம் அருகே தேவர்குளத்தில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-09-22 18:45 GMT

பனவடலிசத்திரம், செப்.21-

பனவடலிசத்திரம் அருகே தேவர்குளத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதிய கட்டிடம் ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் அட்மா திட்டத்தின் கீழ் செயல் விளக்க இடுபொருட்கள் சர்வதேச சிறுதானிய ஆண்டை சிறப்பிக்கும் வகையில் கம்பு விதைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ் பயறு தொகுப்பு திடலுக்கான இடுபொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இதில் மானூர் யூனியன் தலைவர் லேகா அன்பழகன், துணை தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் சண்முகசுந்தரி, தேவர்குளம் பஞ்சாயத்து தலைவர் விஜினா சகாயராஜ், மேலநீலிநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முருகன் திட்ட விளக்க உரையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்