ஆலத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

ஆலத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-09 18:12 GMT

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நாரணமங்கலம் ஊராட்சியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.6.33 லட்சம் மதிப்பீட்டில் நாரணமங்கலம் முதல் காரை பிரிவு ரோடு வரை 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணியினையும், ரூ.8.43 லட்சம் மதிப்பீட்டில் மருதடி மலை முதல் கல்லுக்கட்டி ஏரி வரை 1.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணியினையும், ரூ.9.48 லட்சம் மதிப்பீட்டில் சிறுவாச்சூர் வரை பிரிவு வாய்க்கால் புதுப்பித்தல் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்