வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டையில் வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் அரசு துறைகள் பொதுமக்களுக்கு புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள், வேளாண்மை திட்டங்களுக்கு கடன் உதவிகள் மற்றும் மானிய நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் இத்திட்டங்களின் மக்களுக்கு வழங்கி வரும் கடனுதவிகளின் நிலவரங்கள், நிலுவைகள் மற்றும் காலதாமதங்கள் குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மூலம் பல்வேறு துறைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து விதமான சலுகைகள் குறித்து வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்ட நிதிகள், கடன் உதவிகள், மானிய தொகைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்னா, மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கிகளின் மேலாளர் ஆலியம்மா ஆபிரகாம் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.