வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்த ஆய்வு கூட்டம்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஒரு சிலர் தொய்வாக ஈடுபட்டு உள்ளீர்கள் அவர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இப்பணியினை விரைவில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் 100 சதவீதம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.