வண்ணத்துப்பூச்சிகளை கணக்கெடுத்த மாணவ-மாணவிகள்

வண்ணத்துப்பூச்சிகளை மாணவ-மாணவிகள் கணக்கெடுத்தனர்.

Update: 2023-09-18 21:23 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி மேலூரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வனத்துறை, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் இணைந்து வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வண்ணத்துப்பூச்சியின் வருகை அதிகரிக்கும். இந்த கணக்கெடுப்பில் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறையை சேர்ந்த 3 பேராசிரியர்கள், 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், வனச்சரக அலுவலர் சுப்ரமணியம், அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ் ஆகியோரால் வண்ணத்துப்பூச்சி பற்றியும், அதன் உணவுத் தாவரங்கள், தேன் தாவரங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்க்கையிலும், மற்ற உயிரினங்களுக்கு உணவாகவும், சூழ்நிலை குறிக்காட்டியாகவும் இருப்பது பற்றியும் விளக்கி கூறப்பட்டது. கணக்கெடுப்பின்போது 100-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்