பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள்

திருத்துறைப்பூண்டியில் மாலை நேரத்தில் பஸ்சுக்காக மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-09-16 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் மாலை நேரத்தில் பஸ்சுக்காக மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

92 கிராமங்கள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள், 92 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

மாணவ-மாணவிகள் தினமும் காலையில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பஸ் மூலம் திருத்துறைப்பூண்டிக்கு வந்து பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

ஆபத்தான பயணம்

மாலையில் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்ல திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் பஸ்களில் மாணவ-மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறி படிக்கட்டுகளில் தொங்கியப்படி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

பஸ்களில் ஏறும்போது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருப்பதால் வீட்டுக்கு இரவில் செல்கின்றனர். வீட்டுக்கு மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு வராததால் பெற்றோர்கள் அச்சம் அடைக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்