மாணவி- மாணவிகள் பார்வையிட்டனர்

சிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவி- மாணவிகள் பார்வையிட்டனர்

Update: 2022-09-12 16:30 GMT

ஏரல்:

ஏரல் அருகே சிவகளை தொல்லியல் களத்தை தூத்துக்குடி விகாசா பள்ளி மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர். சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன் அனைவரையும் வரவேற்றார். விவசாய சங்க தலைவர் மதிவாணன் வாழ்த்தி பேசினார். அகழாய்வு இணை இயக்குனர் விக்டர் ஞானராஜ் அகழாய்வை பற்றி விளக்கி கூறினார். வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார். மாணவர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், கணேஷ், மூர்த்தி, ஜெனிட்டா, பிரிந்தினி மற்றும் சுந்தரவள்ளி, தொல்லியல் பணியாளர் சுதாகர், ஜான்சுவான், சின்னத்துரை உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்