அழகர்மலையில் 25 ஆயிரம் விதைப்பந்துகளை மாணவ-மாணவிகள் தூவினர்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அழகர்மலையில் 25 ஆயிரம் விதைப்பந்துகளை மாணவ-மாணவிகள் தூவின

Update: 2023-09-26 20:43 GMT

அழகர்கோவில்,

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அழகர்மலையில் 25 ஆயிரம் விதைப்பந்துகளை மாணவ-மாணவிகள் தூவினர்.

விழிப்புணர்வு கூட்டம்

அழகர்கோவில் கள்ளழகர் கோவில் மண்டப வளாகத்தில் மதுரை ஸ்ரீஅரபிந்தோ மீரா கல்விக்குழுமத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் சுகாதார நல தினம் கடைபிடிக்கப்பட்டு, தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி தலைமை தாங்கினார்.

துணை சூப்பிரண்டு சந்திரசேகர், கல்வி குழுமத்தின் தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குனர் அபிலாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விதைப்பந்து பயன்பாடுகள் குறித்தும், வன விலங்குகள் பாதுகாப்பின் அவசியம் பற்றியும், பழ வகை மரங்களை உருவாக்குவது பற்றியும் துணை ஆணையர் விளக்கி பேசினார். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், கலந்து கொண்டனர்.

25 ஆயிரம் விதைப்பந்துகள்

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கோவில் வளாகப் பகுதி மற்றும் மலை பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளையும், அகற்றினர். பின்னர்அழகர் மலை அடிவாரத்திலிருந்து சோலை மலை முருகன் கோவில் பகுதி வரை சாலையின் இருபுறம் உள்ள வனப்பகுதியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் தூவப்பட்டன.

இதில் சப்போட்டா, சீத்தா, உள்ளிட்ட பல பழ வகை மர விதைகள் விதைக்கப்பட்டன. வரும் காலங்களில் விதைகள் முளைத்து பயன் கிடைக்கும் போது அழகர்மலை சுற்றி திரியும் குரங்குகளுக்கு பழம் கிடைக்கும் என்று பள்ளி கல்வி குழுமத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்