படிக்கும்போதே மாணவர்கள் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்

படிக்கும்போதே மாணவர்கள் இலக்கை நிர்ணயித்து அதனை அடைய வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-10-16 18:17 GMT

இளைஞர் மேம்பாட்டு திட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா வேலூர் ஓட்டேரியில் உள்ள ஆதிதிராவிடர் இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதியில் நடந்தது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள் அடங்கிய திட்ட கையேட்டினை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்காக இத்திட்டம் அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டினை அடுத்த 30, 40 ஆண்டுகளுக்கு வழிநடத்த போகும் இளைஞர்கள் நீங்கள். பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் தங்களுடைய வாழ்வில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற நோக்கோடு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும்

இளைஞர்கள் நல் ஒழுக்கத்தை சுயகட்டுப்பாட்டுடன் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் அடுத்தவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக அமைய வேண்டும். இதற்கு அடிப்படையாக விளங்குவது கல்வி. ஒவ்வொரு

மாணவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் கல்வி பயிலும்போதே தங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்