தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. பேரணியில் அவரது நினைவாக அவர் கூறிய வார்த்தைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி தென்காசியில் முக்கிய வீதிகளில் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர். பேரணியை பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா, பள்ளி அலுவலக இயக்குனர் ராம்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆசிரியர்கள் சந்திரன், கேப்ரிலா, அஸ்லாம் அலி, ஜெனிபர், ரீட்டா மேரி, பிலோமினா, செண்பக பாண்டீஸ்வரி, அருள், கார்த்திக் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் ரவி, அருண், சோபியா, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.