சிறுதானியங்களில் வண்ணத்துப்பூச்சி ஓவியம் வரைந்த மாணவர்கள்

புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறுதானியங்களில் வண்ணத்துப்பூச்சி ஓவியத்தை மாணவர்கள் வரைந்தனர்.

Update: 2022-12-31 19:38 GMT

பாளையங்கோட்டை மேலவாசல் (பழைய மேடை போலீஸ் நிலையம்) புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023 புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிவராம் கலைக்கூடத்தில் ஓவிய பயிற்சி பெறும் 60 மாணவ-மாணவிகள் இணைந்து சிறுதானியங்களை கொண்டு பல அளவுகளில் வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் சூரிய காந்தி பூக்களை வரைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி ஓவியம் வரைந்த மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். ஏட்ரி சுற்றுச்சூழல் ஆர்வலர் மதிவாணன் சான்றிதழ்கள் வழங்கினார். அரசு அருங்காட்சியக காப்பாளர் சிவசத்தியவள்ளி, குழந்தைகள் நல அலுவலர் அருள்செல்வி, பேராசிரியர் சவுந்தர மகாதேவன், நல்நூலகர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் ஓவிய ஆசிரியர்கள் கணேசன், திருவனந்தம், கோவிந்தராஜ், மகாராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்