தமிழ்நாட்டு மாணவர்கள் உயரப் பறக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும் என முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அரசு பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மாணவச் செல்வங்களே..உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு.
எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், எங்கேயும் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.நமது திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும். இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும். என தெரிவித்துள்ளார்.