சென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்
மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.;
சென்னை,
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்வதுடன், சில சமயம் மேற்கூரையில் ஏறி அட்டகாசம் செய்வார்கள். அவர்களை போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புவது வழக்கம்.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். பின்னர் அவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.