மாணவர் சங்கத்தினர் போராட்டம்

மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-09 20:15 GMT

அய்யர்மலையில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.பி.ஏ. பாட பிரிவின் துறை தலைவர் மாணவர்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த பி.பி.ஏ. இளங்கலை 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் மாணவர்களிடம் மரியாதை குறைவாக பேசி வரும் துறை தலைவரை கண்டித்து கல்லூரியின் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை கல்லூரிக்குள் அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட துறை தலைவர் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில் அந்த துறைத்தலைவர் மாணவர்களிடம் மரியாதை குறைவாக இனி பேசுவதில்லை என்று தெரிவித்தாராம். இதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்