தாய் திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

10 ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் தாய் திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Update: 2022-06-20 17:18 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகள் சுமதி(வயது 15). ஒட்டம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் அரசு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த சுமதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுமதிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்