தேசிய அளவிலான வளைகோல் பந்து போட்டிக்கு மாணவி தேர்வு

தேசிய அளவிலான வளைகோல் பந்து போட்டியில் விளையாட சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-10-06 18:50 GMT

இந்திய தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் மாநில அளவில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான வளைகோல் பந்து போட்டியை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தியது. இதில் கரூர் மாவட்டம் துளசிகொடும்புவில் செயல்படும் கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி கனிகா கலந்து கொண்டு விளையாடி தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் கனிகா தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணியின் சார்பில் கலந்து கொண்டு விளையாட உள்ளார். இதையடுத்து மாணவி கனிகாவை பள்ளி நிர்வாகத்தினர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்