மாணவி பாலியல் பலாத்காரம்
மன்னார்குடியில் மாணவியைபாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியனை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ஜோஷி (வயது33) எலக்ட்ரீசியன். இவருக்கு திருணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர், மன்னார்குடியில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று வந்த போது நண்பரின் உறவினர் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி நேற்று இரவு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் ஜோஷி ஆசை வார்த்தைகளை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவி மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோஷியை கைது செய்தனர்.