மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-05-13 18:45 GMT

சங்கராபுரம்:

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் குப்புசாமி வரவேற்றார். சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி, முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சரசு, மலர்கொடி, புவனேஸ்வரி, ஸ்டாலின், ஆசிரியர் உதயகுமார், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்