மக்களை திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

மக்களை திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.

Update: 2022-05-20 20:28 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் பள்ளிவாசலில் அவசர ஊர்தி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 31 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையிலேயே எல்லா தீர்ப்புகளையும் நீதிமன்றங்கள் வழங்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழகம் முழுவதும் ஆயுள் கைதியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு பொது மன்னிப்பில் சாதி, மத பேதமில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிற செப்டம்பர் 10-ந் தேதி தமிழக அளவில் மக்களை திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்