கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பும் போராட்டம்; சத்தியமங்கலத்தில் நடந்தது
கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பும் போராட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது.
சத்தியமங்கலம்
கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பும் போராட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது.
கடிதம் அனுப்பும் போராட்டம்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தபால் அலுவலகம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். சுப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் ஏ.எம்.முனுசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு ஆலைகளை திறக்க வேண்டும். பழமையான கூட்டுறவு ஆலைகளை புதுப்பிக்க வேண்டும். கரும்பு கட்டுப்பாடு சட்டப்பிரிவின்படி பங்கு தொகையை உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.
கோஷங்கள்
மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டெல்லி பாபு பேசினார். கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் எஸ்.வெங்கடாசலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.கணேஷ், செயலாளர் பி.வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.