விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
சூளகிரியில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
சூளகிரி:
சூளகிரி வட்டார தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. சூளகிரி இந்தியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி முருகேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜி, வட்ட செயலாளர் முனியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் 21 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை சட்டமாக்கும் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆரப்்பாட்டத்தின் போது சட்ட நகலை எரித்தனர். இதனை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூளகிரி போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.