ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரிதாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா மாடக்கல் ஊராட்சி கரடிக்கல் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலத்தை மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் அஞ்செட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் மோகன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.