உலா வந்த காட்டு யானைகள்

முடீஸ் விளையாட்டு மைதானத்தில் உலா வந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-01 21:15 GMT


வால்பாறை

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பகல் நேரத்தில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு, எஸ்டேட் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் வழியாக உலா வருகின்றன.இதற்கிடையே முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. அவை கெஜமுடி எஸ்டேட் அருகில் உள்ள வனப்பகுதிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உலா வந்தது. பகல் நேரத்தில் காட்டு யானைகள் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு சென்றதால், தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து இரவில் முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அங்கு கொய்யா, பலாபழங்களை தின்று விட்டு சென்றன. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தோணிமுடி, கெஜமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்து வரும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகள் நடமாட்டம் உள்ளதால், எஸ்டேட் தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்