சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடுவது தான் திராவிட மாடல் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
சென்னை,
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.பின்னர் பேசிய அவர் ,
மாற்றம் என்பது ஒரே நேரத்தில் நிகழ கூடியது அல்ல .சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக,பாடுவடுவது தான் திராவிடல் மாடல்.,கலைஞரின் திட்டங்கள் சமூக மாற்றத்துக்கு வித்திட்டன.ஆயிரம் ஆண்டுகள் சமூக இழுக்கை ஒழிக்கத்தான் பாடுபடுகிறோம் .
கல்வி, வேலைவாய்ப்பு , அதிகாரம் ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடம் வழங்கப்பட்டது தான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம் . என கூறினார்