தூத்துக்குடியில்மழைநீர் வடிகாலில் கழிவுநீர் குழாயை இணைத்தால் கடும் நடவடிக்கை: ஆணையாளர்

தூத்துக்குடியில்மழைநீர் வடிகாலில் கழிவுநீர் குழாயை இணைத்தால் கடும் நடவடிக்கை: ஆணையாளர்

Update: 2023-03-30 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி மழைநீர் வடிகாலில் கழிவுநீர் குழாயை இணைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மழைநீர் வடிகால்

இது குறித்து அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று கழிவுநீர் வெளியேற்றுவதற்கு வசதியாக பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரையண்ட்நகரை சேர்ந்த ஒருவர் வீட்டின் முன்பு பாதாள சாக்கடை திட்ட வசதி இருந்த போதிலும், கழிவுநீர் குழாயை மழைநீர் வடிகாலில் இணைத்து இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நடவடிக்கை

மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் குழாய்களை இணைக்கக்கூடாது. அதுபோன்று இணைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்