கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.;

Update:2023-09-27 16:49 IST
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் விவசாயிகள் மற்றும் உள்ளூர் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் வாகன போக்குவரத்து முடங்கியது.

இந்த நிலையில் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்று சிலர் போலியான வீடியோக்களையும், தகவல்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்