பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-10-08 18:45 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது இடங்களில் அனைத்து வகையான பேனர்கள் வைப்பதற்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்சமயம் ஆங்காங்கே, அவ்வப்போது பேனர்கள் வைத்த வண்ணம் உள்ளனர். மேலும், பேனர்கள் தயார் செய்து பொருத்தும் நிறுவனத்தினரும் பொது இடங்களில் பேனர்களை நிறுவி வருகின்றனர்.

இனி வரும் காலங்களில் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் நடவடிக்கைகள் யாரும் ஈடுபடக்கூடாது. இதனை மீறுவோர்கள் மீது நகராட்சிகள் சட்டம் 1920-ன் கீழ் கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக பேனர்கள் தயாரிக்கும் மற்றும் பொருத்தும் நிறுவனங்களும் இந்த நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்