தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
அம்பை யூனியன் சிவந்திபுரத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய துணை செயலாளர் செல்வம் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். அம்பை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான பரணி சேகர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன், நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பை யூனியன் துணைத்தலைவர் ஞானக்கனி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.