மாரண்டஅள்ளியில்தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்

Update:2023-07-13 00:15 IST

மாரண்டஅள்ளி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பாலசுப்பிரமணி தெருவில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரகுமான் பாரி ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்து பேசினர். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கோபால், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜகுமாரி, மணி, முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் மற்றும் கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் லட்சுமி, கீதா, ரீனா, அபிராமி, சுகந்தி, சிவகுமார், வெங்கடேசன், யதிந்தர், கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்