பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் வினோத வழிபாடு

காவேரிப்பட்டணம் அருகே கோடிபுதூர் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் வினோத வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-14 18:45 GMT

காவேரிப்பட்டணம்

ேகாவில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடி புதூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 113-வது ஆண்டாக கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் தேவீர அள்ளி, குடிமேனஅள்ளி, அகரம், மருதேரி, விளங்காமுடி ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அலகு குத்தியும், மாவிளக்கு எடுத்தும் மேளதாளத்துடன் வந்து வழிபட்டனர்.

இத்திருவிழாவில் 7 அடி உயரத்தில் நான்கு பரண்கள் அமைத்து அதில் ஆடு, பன்றிகளை கட்டி வைத்து பூசாரிக்கு அருள் வந்து பரண் மீது ஏறி கட்டி வைத்துள்ள பன்றி மற்றும் ஆட்டின் வயிற்றை கிழித்து அதனுள் வாழைப்பழத்தை போட்டு பிசைந்து பக்தர்களுக்கு வீசினார். அதனை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து உண்டனர்.

சாமி தரிசனம்

இந்த வினோத வழிபாட்டில் பங்கேற்று உண்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும், குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். சேலம் கிருஷ்ணகிரி, பெங்களூரு, தர்மபுரி, குப்பம், உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்