எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-10 19:00 GMT

கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக்அலியை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை கண்டித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ரபீக் அகமது, நகரத் தலைவர் சிராஜ்தீன், சட்டமன்றத் தொகுதி தலைவர் தாவூத் நிஷார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சாதிக் அலியை விடுதலை செய்ய கோரியும், என்.ஐ.ஏ.-வை கலைத்திட கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்