எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன போரில், பாலஸ்தீனுக்காக உலக நாடுகள் தலையிட வேண்டும், இஸ்ரேலுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் தெற்குவாசல் பகுதியில் நடந்தது. கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிராஜுதீன் வரவேற்றார். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் காதர், எஸ்.டி.டி.யூ. மாநில துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் சமுதாய இயக்க தலைவர்கள், முன்னணி அமைப்பினுடைய நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பிஸ்மில்லாஹ்கான், எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபூர் ரகுமான், முபாரக், மஸ்ஜித், இமாம் முகமது, மிர்ஷாத், மக்தூமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில், மேற்கு தொகுதி தலைவர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.