ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

ஆரணி பையூர் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2022-10-05 11:47 GMT

ஆரணி

ஆரணி டவுன் பரசுராமன் தெரு பையூர் ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இப்பகுதியானது பொதுப்பணித்துறைக்கு சம்பந்தமான அரசு இடமாகும்.

அந்த இடத்தில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து நீர்பிடிப்பு பகுதியில் வீடுகள் கட்டும் பணிகள் நடத்தி வருவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராஜகணபதி, வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் லோகேஷ், இளவரசன், ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு துறை அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டும் பணியினை தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்