தனியார் ஓட்டலுக்கு மின்மாற்றி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்

திருக்கடையூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஓட்டலுக்கு மின்மாற்றி அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை

Update: 2022-11-10 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சன்னதி வீதியில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல்களுக்கு தனியாக ஒரு மின்மாற்றி அமைக்க அந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ள இடத்தில் சாலையின் ஓரத்தில் சிமெண்டு கட்டை கட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஊராட்சி உறுப்பினர் செந்தில், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்து ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் மின்மாற்றி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்