"ஆன்லைன் விளையாட்டுகளை நிறுத்திவிட்டு சைக்கிள் ஓட்ட தொடங்குங்கள்"- இளைஞர்களுக்கு சைலேந்திரபாபு அட்வைஸ்

சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவற்றில் இளம் தலைமுறையினர் கவனம் செலுத்தவேண்டுமென முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Update: 2023-07-09 09:16 GMT

சென்னை,

சென்னையில் நடைபெற்ற சைக்கிளிங் திருவிழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது;

அடுத்த தலைமுறையை வழிநடத்தக்கூடிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் ரம்மி, கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் போன்றவற்றை நிறுத்திவிட்டு படிக்கும் நேரம் தவிர்த்து மீதி நேரங்களில் சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவற்றில் இளம் தலைமுறையினர் கவனம் செலுத்தவேண்டும்.

அப்போது அவர்களின் உடல்நலம், மனநலம் மேம்படும். இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வராது. சைக்கிள் ஓட்டுவதை பொதுமக்கள் அதிகப்படுத்தவேண்டும். சைக்கிள் ஓட்டுவதால் பல நோய்கள் வராமல் தடுக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்