"விழுப்புரத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்பப்படும்" - அமைச்சர் பொன்முடி தகவல்

கல் சுவர் எழுப்பப்பட்டு கடல் அரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார்.

Update: 2022-12-10 20:22 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதோடு கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ரூ.14.5 கோடியில் மீன் இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பை தடுக்கும் பணிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கல் சுவர் எழுப்பப்பட்டு கடல் அரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். மேலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்