வீட்டிற்குள் புகுந்த கரடியால் பரபரப்பு

கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-25 14:04 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே உல்லத்தட்டி கிராமத்தில் 90 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி கரடி ஒன்று முகாமிட்டு உள்ளது. அடிக்கடி குடியிருப்புகளுக்குள் கரடி புகுந்து உணவு பொருட்களை தின்றும், சேதப்படுத்தியும் செல்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் உல்லத்தட்டியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கரடி புகுந்தது. அங்கிருந்த 2 குழந்தைகள் அச்சத்தில் அலறினர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கரடியை அங்கிருந்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மளிகை கடையின் கதவை கரடி உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஒரு வாரமாக கரடி குடியிருப்பில் நடமாடி வருகிறது. மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் முன், கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராமத்தில் வளர்ந்து உள்ள புதர் செடிகளை ஊராட்சி நிர்வாகம் வெட்டி அகற்ற வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்