'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சி; கலெக்டர்-எம்.எல்.ஏ. பங்கேற்பு

சங்கரன்கோவிலில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2023-07-03 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022- 2023 கல்வியாண்டில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்றார். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து தென்காசி உதவி கலெக்டர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் நடராஜன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். திறன் மேம்பாடு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்க்ளின் மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்து பேசினார். சங்கரன்கோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அமலி ஜென்சி வங்கி கடன் குறித்து விளக்க உரையாற்றினார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி சம்பந்தமான தகவல்கள் அடங்கிய புதுமைப் பெண் புத்தகம் மற்றும் நான் முதல்வன் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்